நிரூபிக்க வேண்டுமென்றால் எனது பிறப்புறுப்பில் தான் கமெரா வைக்க வேண்டும்: நடிகை பகீர் பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இவர் வெளியிட்ட பட்டியலில் இயக்குநர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் இடம்பெற்றன. இதையடுத்து தன் பெயரை நடிகை ஸ்ரீரெட்டி பயன்படுத்தியதால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்திருந்தார்.

ஸ்ரீரெட்டி என்மீது பொய் புகார் அளித்துள்ளார் அவர் மீது வழக்குதொடருவேன் என இயக்குநர் சுந்தர் சி கூறியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி அளித்துள்ள பேட்டியில், நடிகர் சங்க தலைவர் விஷால் இதுபோன்ற பிரச்சனைகளை தட்டிக்கேட்க வேண்டும் என்றும் சமீபத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் தான் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நடிகர், ராகவா லாரன்ஸிடம் நான் மட்டும் ஏமாறவில்லை. எனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணும் இதே பிரச்சனையை அவரிடம் சந்தித்துள்ளார். அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அந்த உண்மையும் வெளியே வரும் என கூறியுள்ளார்,

மேலும், விளம்பரத்திற்காக நான் இப்படி செய்வதாக லாரன்ஸ் கூறியுள்ளார். தற்போது வெளிநாடு முதல் இந்தியாவின் மூலை முடுக்கிலும் என்னை எல்லோருக்கும் தெரியும். ஆனால், லாரன்ஸ்க்கு அந்த புகழ் இல்லை. நான் விளம்பரத்திற்காக இதை செய்யவில்லை.

மேலும், என்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் கேட்டால், எனது பிறப்புறுப்பில் தான் கமெரா வைத்து காட்ட வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்