இறந்த மனைவியின் சடலத்தின் அருகே உயிரை விட்ட கணவன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பக்கவாதத்தால் உடல் செயலிழந்த நபர் உதவிக்கு ஆளின்றி மனைவியின் சடலத்தின் அருகே மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கார்வார் பகுதியில் குறித்த நெஞ்சைப் பிசையும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கார்வார் பகுதியில் ஆனந்த் கோல்கார்(60) மற்றும் கிரிஜா(55) தம்பதிகள் குடியிருந்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த ஆனந்துக்கு 2016 ஆம் ஆண்டு முதல் முழு உடலும் பாதிக்கப்பட்டது.

இதனால் அவரது மனைவியின் பராமரிப்பில் அவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி கிரிஜாவின் சகோதரர் சுப்ரமணியம் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

ஆனால் அழைப்பை யாரும் எடுத்து பேசாததால் சுப்ரமணியம் அடுத்த நாள் மீண்டும் அழைத்துள்ளார்.

அப்போது கிரிஜாவின் மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

தொடர்ந்து திலைபேசியில் அழைத்தும் எந்த பதிலும் இல்லை என்ற நிலையில், ஞாயிறு அன்று சுப்ரமணியம் நேரடியாக கிரிஜாவின் வீட்டுக்கு சென்று விசாரிக்கலாம் என கிளம்பியுள்ளார்.

கார்வார் பகுதிக்கு சென்றபோது கிரிஜாவின் வீடு பூட்டி இருப்பது தெரியவந்தது. அக்கம்பக்கத்தினரை விசாரித்தபோது, அவர்கள் கிரிஜாவை பார்த்து சில நாட்கள் ஆனதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகம் அடைந்த சுப்ரமணியம் வீட்டின் கூரையை பெயர்த்து உள்ளே எட்டிப்பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உள்ளே தம்பதிகள் இருவரும் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்த நிலையில் உள்ளனர். மட்டுமின்றி அடல் அழுகிய துர்நாற்றம் தாங்க முடியாத நிலையில் எழுந்துள்ளது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். கிரிஜா இறந்த நிலையில் உதவிக்கு அழைக்க முடியாமல் ஆனந்த் தவித்துள்ளார்.

மனைவி இறந்து 5 நாட்கள் கடந்த நிலையில் பட்டினியாலும், தண்ணீர் இன்றியும் மிகவும் கொடூரமான நிலையில் அவர் இருந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திங்களன்று ஆனந்த் மரணமடைந்துள்ளார்.

தொடர்ந்து 5 நாட்கள் உணவு தண்னீர் ஏதுமின்றி அவதிப்பட்ட அவர் இறுதியில் குழைந்து விழுந்துள்ளார், இதுவே அவரது மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers