அப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது படுத்திருந்த குழந்தை: கண்ணீர் வரவழைக்கும் காட்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தனது தந்தை இறந்துபோனது கூட தெரியாமல் சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை படுத்திருந்த காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்பவர் பலியாகினார்.

முகத்துக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. தற்போது 5 மாத பெண் குழந்தை உள்ளது. முகுத்தின் இறுதிசடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.

இறுதிசடங்கின்போது, தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரது குழந்தை சவப்பெட்டியின் மீது படுத்திருந்தது. அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து எழுந்து சவப்பெட்டியின் மீது அமர்ந்திருந்தது.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைலாகி வருகிறது. இந்நிலையில், ஜாலாவர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்தர் அக்குழந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ''உன்னை பார்க்கும் போது எங்களுக்கு கண்ணீர் வந்தது. நீ அந்த சவப்பெட்டியில் இந்திய கொடியின் மீது அமர்வதற்கு முன்புதான் உன் தந்தையின் முகத்தை பார்த்தாய்.

நீ பெரிய பெண்ணாக வளர வேண்டும். உன்னுடைய அப்பா பெருமையடையும் வகையில் நீ வாழ வேண்டும் என்று எழுதியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்