துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட பிரபல நடிகர்: மாவோயிஸ்ட் என நினைத்து சுற்றி வளைத்த அதிரடிப்படை

Report Print Vijay Amburore in இந்தியா

திருவனந்தபுரத்தில் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் கிருஷ்ணாவை மாவோயிஸ்ட் என நினைத்து அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதால், எப்பொழுதுமே அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டு பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடிக்கும் கழுகு 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தில் ஆகாயத்தில் பறந்தவாறே, கிருஷ்ணா செந்நாய்களை வேட்டையாடுவதை போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதற்காக நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி மேற்கொண்டிருந்தார். காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிரடிப்படையினர், துப்பாக்கி முனையில் நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்தனர்.

பின்னர் சினிமாவிற்கான ஒத்திகை என்பதை புரிந்து கொண்ட அதிரடிப்படையினர் துப்பாக்கியை மட்டும் கைப்பற்றி சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், துப்பாக்கியின் உரிமத்தை காண்பிப்பதற்காக சென்னையைச் சார்ந்த கன் ராஜ் என்பவர் கேரளாவிற்கு விரைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers