நடிகை ரோஜா பரபரப்பு புகார்

Report Print Raju Raju in இந்தியா

கும்பாபிஷேக நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கமாட்டோம் என்ற தேவஸ்தானத்தின் உத்தரவு சாமி நகைகளை கொள்ளையடிக்க நடக்கும் சதித்திட்டம் என நடிகை ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரபல நடிகையும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறுகையில், கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு மற்றும் மலைப்பாதையில் வாகனங்கள் செல்லவும், யாரும் நடந்து செல்லவும் தடை என்ற அறிவிப்பு பல சந்தேகங்களை எழுப்புகிறது.

தேவஸ்தானம் மீது முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறிய ஊழல் புகார் உண்மையா என்ற கேள்வி தற்போது எழுவதாக கூறிய அவர், 9 நாட்கள் கோயிலுக்குள் யாரையும் அனுமதிக்காமல் சுரங்கத்தை தோண்டி நகை, பணத்தை எடுக்க நினைக்கிறார்களா என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers