அவனை விட்டு விடாதீர்கள்: இறப்பதற்கு முன்னர் இளம்பெண்ணின் கடைசி வார்த்தை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் மாடியிலிருந்து கீழே குதித்து இறந்த நிலையில், கணவரே அவரை கீழே தள்ளியிருக்கலாம் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புதுடெல்லியை சேர்ந்தவர் மாயங்க் சிங்வி. இவர் மனைவி அனிஷியா பத்ரா (32).

அனிஷா இரு தினங்களுக்கு முன்னர் வீட்டு மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.

இதை தற்கொலை வழக்காக பொலிசார் பதிவு செய்த நிலையில், அனிஷியாவின் கணவர் மாயங்க் வரதட்சணை கொடுமையால் அவரை கொன்றிருக்கலாம் என அனிஷியா குடும்பத்தார் கூறியுள்ளனர்.

இதையடுத்து இரண்டாம் முறையாக அனிஷியாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இது குறித்து பேசிய அனிஷியாவின் சகோதரர் கரண், இறப்பதற்கு முன்னர் அவர் எனக்கு நிறைய மெசேஜ்களை அனுப்பினார்.

அதில் மாயங்க் என்னை அறையில் வைத்து பூட்டியுள்ளார், அவரால் என் வாழ்க்கை பறிபோக போகிறது. அவரை விட்டு விடாதீர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே என் சகோதரியை கீழே தள்ளிவிட்டு கூட கொலை செய்திருக்கலாம்.

இது குறித்து விசரிக்க மாயங்கை கைது செய்ய கோரியும் பொலிசார் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார்.

அனிஷியாவுக்கும், மாயங்க்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் மாயங்க் அப்போதேலிருந்தே குடித்துவிட்டு அனிஷியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் குடும்பத்தார் கடந்த மாதமே புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் சம்பவம் நடந்த வீட்டை பொலிசார் சீல் வைத்த பின்னரும், ஆதாரங்களை அழிக்க மாயங்க் அங்கு சென்றார் என அனிஷியாவின் சகோதரர் கரண் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...