காதல் கணவனை மீட்டு தரக்கோரி கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தும் மனைவி

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னியாகுமரியில் காணாமல்போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி கொட்டும் மழையிலும் காதல் மனைவி போராட்டம் நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சதிஷ். இவருக்கும் நாகர்கோவில் நாகர்கோவிலை சேர்ந்த சகாய டென்சி என்பவருக்கும் மிஸ்டு கால் மூலம் நட்பு உருவாகியுள்ளது. நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

நாட்கள் செல்ல செல்ல, இருவருக்குமிடையே அடிக்கடி வீட்டில் சண்டை வந்துள்ளது. 3 முறை காவல்நிலையம் சென்று சமாதானம் செய்து திரும்பும் அளவிற்கு இவர்களது காதல் திருமண வாழ்க்கை இருந்து வந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் சண்டை போடா கூடாது என முடிவெடுத்து வாடகை வீடு ஒன்றில் குடியேறினர். ஆனால் அங்கு வாடகை பிரச்சனை ஆரம்பமாகவே, மீண்டு சண்டை உருவெடுத்துள்ளது. இதனால் கோபமான சதிஷ், டென்சியை தனியே வீட்டில் தவிக்க விட்டு காணாமல் போயுள்ளார்.

அடுத்த சில நாட்களிலேயே கையில் பணமில்லாததால், பசியில் தவித்த டென்சி, சதீஷை பல இடங்களில் தேட ஆரம்பித்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் கணவன் கிடைக்காததால், இன்று மாமியார் வசிக்கும் வீட்டின் முன் வாசலுக்கு சென்ற டென்சி, கொட்டும் மழையிலும் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...