வெளிநாட்டுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்: காப்பாற்றுமாறு கதறும் கணவன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவை சேர்ந்த பெண் கடந்த மார்ச் மாதம் மஸ்கட்டுக்கு பணிக்கு சென்று பல துன்பங்களை அனுபவிக்கும் நிலையில் அவரை மீட்க கணவர் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்தவர் ஹர்தேவ் சிங். இவர் மனைவி சரப்ஜீத்.

ஹர்தேவ் சாதாரண வேலை செய்து வந்த நிலையில் அவரின் வருமானம் குடும்பத்துக்கு போதவில்லை.

இதையடுத்து ஏஜண்ட் ஒருவர் மூலம் கடந்த மார்ச் மாதம் மலேசியாவுக்கு உதவியாளர் பணி செய்ய சரப்ஜீத் அனுப்பட்டார்.

பின்னரே தான் ஏமாற்றப்பட்டோம் என சரப்ஜீத்துக்கு தெரிந்தது. ஏனெனில் மலேசியாவுக்கு பதிலாக அவர் மஸ்கட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பட்டார்.

அங்கு சரப்ஜீத்துக்கு அவர் முதலாளி கடுமையான வேலைகள் தந்ததோடு, சம்பளம் மற்றும் உணவுகள் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சரப்ஜீத் போலவே மஸ்கட்டில் வேறு இடத்தில் அடிமையாக சிக்கி கொண்ட பரீதா கான் என்ற பெண் பல அதிகாரிகளை பிடித்து எப்படியோ இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

பரிதாவை மஸ்கட்டியில் பார்த்த சரப்ஜீத் தனது நிலையை எடுத்து சொல்லி தனது கணவர் ஹர்தேவ் போன் நம்பரை அவருக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்தியா வந்த பரீதா, ஹர்தேவை நேரில் சந்தித்து சரப்ஜீத் குறித்து கூறியதோடு இது குறித்து பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்க கூறினார்.

தற்போது ஹர்தேவ் பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எங்களின் மகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என விரும்பினோம்.

அதற்கு சம்பாதிக்க தான் சரப்ஜீத் வெளிநாடு சென்றார். ஆனால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் தான் எப்படியாவது என் மனைவியை மீட்டுதர வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...