திருமணமான ஆணுடன் காதல்: கொன்று எரிக்கப்பட்ட இளம்பெண்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் காதலியை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரத்தின் ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி, இவரது மகள் மாலதி(வயது 20).

சென்னையில் தனது தந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்தார், இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்றவர் சென்னை திரும்பவில்லை.

போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் வீரபாண்டி பொலிசில் புகார் அளித்தனர்.

இதற்கிடையே கடந்த 13ம் திகதி கண்மாய் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில் சடலம் மாலதி என்பதும், அடிக்கடி சிவக்குமார் என்பவருடன் போனில் பேசி வந்ததும் கண்டயறியப்பட்டது.

திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் சிவக்குமார் அதை மறைத்து மாலதியுடன் பழகி வந்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட மாலதி, ஊருக்கு வந்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்தவர் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று எரித்துக் கொன்றது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ள சிவக்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்