பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தக்கிய குடும்பம்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பெண் ஒருவரை குடும்பமே கண்மூடித்தனமாக தாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாஸ்தானின் Jhunjhunu மாவட்டத்தில் உள்ள Bilwa கிராமத்தில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மூன்றுக்கும் மேற்பட்டோர் கண்மூடித்தனமாக அடிக்கின்றனர்.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், கடந்த 6-ஆம் திகதி Dayaram Jat என்பவரின் சகோதரர் Maniram Jat அங்கிருக்கும் நிலம் ஒன்றில் டிராக்டரை வைத்து உழுததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அந்த நிலம் பிரச்சனையில் இருப்பதால், Dayaram Jat மனைவி இந்த நிலம் யாருக்கும் சொந்தம் என்ற பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.

அந்த நேரத்தில் நீங்கள் இப்படி நிலத்தை உழலாமா என்று கேள்வி கேட்டு, நிலத்தை உழவிடாமல் தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த Maniram Jat தன் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வந்து அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

அதன் பின் ஒரு கட்டத்தில் அவரை மரத்தில் கட்டி வைத்தும் அடித்துள்ளனர். இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து Maniram Jat, அவரது மனைவி மற்றும் ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், Maniram Jat மற்றும் Dayaram Jat இருவரும் சகோதரர்கள், குறிப்பிட்ட நிலம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று தகராறு ஏற்பட்டதன் காரணமாக்வே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...