முட்டைகளை கை தவறி உடைத்த 5 வயது சிறுமி... பாவம் செய்துவிட்டதாக தரப்பட்ட அதிர்ச்சி தண்டனை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சிறுமி பறவை முட்டைகளை உடைத்ததால் அது கிராமத்துக்கு தீங்கு விளைவிக்கும் என பஞ்சாயத்தார் சிறுமிக்கு கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் வசிக்கும் குஷ்பு (5) என்ற சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3-ஆம் திகதி பறவை முட்டைகளை பள்ளி அருகில் எடுத்து வந்த குஷ்பு அதை கை தவறி கீழே போட்டு உடைத்துள்ளார்.

இந்த ஊர் வழக்கப்படி பறவை என்பது மழையை கொண்டு வரும் தூதுவராக பார்க்கப்படுகிறதாம்.

இதையடுத்து பஞ்சாயத்து கூட்டப்பட்ட நிலையில் சிறுமி பாவம் செய்துவிட்டதாக கூறப்பட்டது.

இதற்கு தண்டனையாக 11 நாட்கள் குஷ்புவை வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

11 நாட்களுக்கு பின்னர் குஷ்பு புனிதமடைய சில சம்பிரதாயங்களை செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இதன்பின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கப்படாத குஷ்பு வாசலில் தங்கவைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று தகவலறிந்த பொலிசாரும், அதிகாரிகளும் குஷ்பு வீட்டுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசி புரியவைத்தார்கள்.

இதையடுத்து சில சம்பிரதாயங்களுக்கு பின்னர் குஷ்பு வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...