உங்கள் பாஸ்போர்ட் வேண்டும் என்றால் என்னை கட்டிப்பிடியுங்கள்: பாஸ்போர்ட் சரிபார்க்க வந்த போலீசின் அராஜகம்

Report Print Trinity in இந்தியா

பெண்களின் பாதுகாப்பு என்பது இந்தியாவை பொறுத்தவரை போக போக மோசமாகி கொண்டே போகிறது எனலாம். காசியாபாத்தை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது பாஸ்போர்ட் சரிபார்க்கும் செயல் தொடர்பாக வந்த பொலிஸ்காரர் ஒருவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.

தேவேந்திர சிங் என்ற அந்த போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரின் பாஸ்போர்ட் தகவல்களை சரிபார்க்க வந்தபோது தான் மேற்கண்ட நிகழ்ச்சி நடந்துள்ளது.

ஸ்வேதா கோஸ்வாமி என்ற பெண் பத்திரிகையாளர் தனது வீட்டில் வைத்தே பொலிஸாரால் துன்புறுத்தப்பட்டார் என்ற செய்தி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இது பற்றி முன்னணி தின பத்திரிகை ஒன்றின் பத்திரிகையாளராக இருக்கும் ஸ்வேதா கோஸ்வாமி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் காசியாபாத் போலீசாருக்கு டுவிட் செய்து உள்ளார்.

அந்த டீவீட்டில் சில நிமிடங்களுக்கு முன் என் வீட்டிற்கு போலீஸ்காரர் ஒருவர் தகவல் சரிபார்ப்புக்காக வந்தபோது மிக ஆபாசமாக நடந்து கொண்டார். இந்த அனுபவம் பத்திரிகையாளரான எனக்கே பயத்தை கொடுத்தது. அவர் அங்கிருந்து கிளம்பும்வரை எனது உதவியாளர் என்னுடன் இருக்க வேண்டி வந்தது என்றும் மேலும் தனது செயல்களை அவர் தாமதப்படுத்தினதாகவும் கூறப்படுகிறது.

தகவல் சரிபார்ப்பு முடிந்த உடன் உங்கள் சரிபார்ப்புகளை நான் முடித்து கொடுத்து விட்டேன் எனக்கு என்ன தருவீர்கள் என்று பொலிஸ்காரர் ஸ்வேதாவை கேட்டதாகவும் ஒரு முறை கட்டிபிடிக்கலாம் அல்லவா என்றும் கேட்டதாகவும் அவர் தனது டீவீட்டில் தெரிவித்து உள்ளார்.

பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையே தரம் தாழ்ந்து நடந்து கொள்வது எப்போது சரியாகும் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...