மனைவி பிரிந்ததால் ஏற்பட்ட மன அழுத்தம்: மனம் கலங்கிய பிரபல நடிகர் சாய் சக்தி

Report Print Raju Raju in இந்தியா

பிரபல சீரியல் நடிகர் சாய் சக்தி தனது மனைவியை பிரிந்துவிட்டதாக கூறியுள்ளார்.

தமிழ்தொலைக்காட்சி சீரியல்கள் பலவற்றில் நடித்தும், ஜோடி, கிச்சன் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட ஷோக்களில் கலந்துகொண்டும் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாய் சக்தி.

இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு தந்தை வழி உறவு பெண்ணான அனீஸ் பாத்திமா என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணமான இரண்டே ஆண்டுகளில் கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றியதாகத் தெரிகிறது. ஆனாலும் சேர்ந்து வாழ்ந்து வந்த தம்பதிக்கு கடந்தாண்டு ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் மனைவியை பிரிந்துவிட்டதாக சாய் சக்தி தற்போது கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், அறியாத வயதில் கல்யாணம் செய்யக்கூடாது என்பது எனக்குத் தான் பொருந்தும்.

ஆரம்பத்தில் இருந்த சின்னச் சின்ன பிரச்னைகள், இடையில் தேவையில்லாமல் தலையிட்ட சில மூன்றாவது நபர்களால் பெரிதாகிவிட்டது.

இனியும் சேர்ந்து வாழ முடியாது என்பது இரண்டு பேருக்குமே புரிந்தபோது நான் பொறுமை காத்தேன்.

ஆனால் பாத்திமா குடும்பத்தார் அவரை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

இனி பேச ஒண்ணுமில்லை. சீரியல், ஆங்கரிங்ல மனசை செலுத்தி மன அழுத்தத்திலிருந்து வெளியே வர முயல வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...