ஓடும் ரயிலில் பயங்கரம்: கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட பெண்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் அஸ்ஸாமில் கடந்த 24 மணி நேரத்தில் இருவேறு இடங்களில் ஓடும் ரயிலில் 2 பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜஸ்தானுக்கு இயக்கப்படும் ரயில், அவத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ்.

இந்த ரயிலில் நேற்று புதன்கிழமை மதியம் ஜோர்ஹாத் மாவட்டம் மரியானி ரயில் நிலையத்தில் சென்றபோது, ரயிலின் கழிவறையில் பெண் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், கொலை செய்யப்பட்டவர் அஸ்ஸாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தைச் சேர்ந்த லாலிமா தேவி(48) என்பதை கண்டறிந்தனர்.

மட்டுமின்றி அவரது கழுத்தைச் சுற்றி அஸ்ஸாமில் பாரம்பரியமாக அணியப்படும் கமுசா துணி இருந்துள்ளது. மேலும், பொலிஸாரின் விசாரணையில் அந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

லாலிமா தேவி திப்ருகாரிலிருந்து பீகாருக்கு பயணம் செய்ய டிக்கெட் எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதேபோல, அஸ்ஸாம் மாநில உள்ளூர் ரயில் ஒன்றில் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சிமலுகுரி ரயில் நிலையத்தில் ரயில் சென்றபோது, கழிவறையில், அதே சிவசாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகுமாரி(21) என்ற பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது.

இந்த பெண்ணின் கழுத்தைச் சுற்றியும் அஸ்ஸாமின் கமுசா துணி இருந்துள்ளது. இந்த பெண்ணும் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அஸ்ஸாமில் ஓடும் ரயிலில் நடைபெற்றுள்ள இந்த இரண்டு பெண்களின் கொலை ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உரிய விசாரணைக்கு பின்னரே இந்த கொலைகள் தொடர்பில் உறுதியான தகவல்களை வெளியிடமுடியும் எனபொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...