கிழிந்த உடையுடன் இருந்த ஏழை சிறுவனுக்கு கிடைத்த 50,000 ரூபாய்: என்ன செய்தான் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிசிடம் ஒப்படைத்த ஏழை மாணவனுக்கு பாராட்டு விழா நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஈரோட்டை சேர்ந்த பாட்சா - அப்ரோஜ் பேகம் தம்பதியின் மகன் யாசின் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.

சில நாட்களுக்கு முன்னர் யாசின் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது சலையில் பை ஓன்று இருப்பதை பார்த்து அதை திறந்துள்ளான்.

அதில் 50,000 ரூபாய் இருந்த நிலையில் பையை எடுத்து கொண்டு ஆசிரியரிடம் சென்றுள்ளான்.

அந்த பையை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அதனை பொலிசாரிடம் யாசினை வைத்து கொண்டு ஒப்படைத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறுவனின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழத்துகளை கூறினார்.

சிறுவனுக்கு பாராட்டு விழா நடத்தவும் பொலிசார் முடிவு செய்தனர்.

பள்ளி சீருடை கிழிந்த நிலையில் குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்தபோதும் பணத்தை ஒப்படைத்த யாசினின் நேர்மையை பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...