காலா பட நடிகருக்கு கதை எழுதிய திரையுலக பிரபலம் தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

பிரபல கதாசிரியர் ரவிசங்கர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்த நானா படேகரின் அக் தக் சப்பான் திரைப்படத்துக்கு கதை எழுதி பிரபலமானவர் ரவிசங்கர்.

இவர் நேற்று மதியம் அந்தேரியில் உள்ள தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் ரவிசங்கர் கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவிசங்கர் சில காலமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதற்கான சிகிச்சையை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...