பிரேதப் பரிசோதனையிலும் விட்டு வைக்காத மர்மம்! 11 பேர் மரண விவகாரத்தில் வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா
1062Shares
1062Shares
lankasrimarket.com

இந்தியாவில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நாராயணி தேவியின் மரணம் மட்டும் எப்படி நிகழ்ந்தது என்பது மருத்துவர்களுக்கே இன்னும் குழப்பமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி புராரி பகுதியில் பட்டியாலா என்ற குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டனர்.

இவர்கள் தற்கொலை விவகாரத்தில் பல மர்மங்கள் நீடித்தன. ஏனெனில் அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் அவர்கள் மூடநம்பிக்கையினால் இறந்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டதால், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் வீட்டிலிருந்து மேலும் டைரிகள், சில குறிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதால், இவர்களின் மர்மம் தொடர்ந்து நீடித்தது.

அதன் பின் ஒருவழியாக அவர்கள் வீட்டின் பக்கத்தில் இருக்கும் சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 11 பேரின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று 10 பேரின் முடிவு வெளியாகியிருந்த நிலையில், வீட்டின் மூத்தரவரான நாராயணி தேவியின் பிரேத பரிசோதனை முடிவு மட்டும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் 11 பேரின் பிரேத பரிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.

அதில் 10 பேர் தூக்கில் தொங்கிதான் தற்கொலை செய்துகொண்டனர் என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால், அந்த வீட்டில் மிகவும் முதியவரான நாராயணி தேவியின் மரணம் மட்டும் எப்படி நிகழ்ந்தது என்பது மருத்துவர்களுக்கே இன்னும் குழப்பமாக இருப்பதால், அதை அறிந்துகொள்ள அந்த வீட்டுக்கு மருத்துவர்கள் குழு சென்று தடயங்களைச் சேகரிக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் 11 பேர் மரண விவகாரத்தில் 11 என்ற எண் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன், பீதியையும் கிளப்பியுள்ளது.

ஏனெனில் பட்டியாலா குடும்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11, அவர்களின் வீட்டில் சந்தேகிக்க கூடியதாகப் பொருத்தப்பட்டிருந்த குழாய்களின் எண்ணிக்கை 11, பட்டியாலா குடும்பத் தலைவர் 11 வருடங்களாக டைரி எழுதி வந்துள்ளார்.

இறுதியாகப் பட்டியாலா குடும்பத்தினர் இறந்து சரியாக 11 நாள்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வெளியாகியுள்ளது.

இதனால் 11 என்ற எண்ணின் மர்மமும் இந்தக் குடும்பம் இறந்ததற்கான மர்மமும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்