திருமணமான சில மாதத்தில் கணவருடன் ஒன்றாக தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி

Report Print Raju Raju in இந்தியா
338Shares
338Shares
lankasrimarket.com

இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் கணவரும், மூன்று மாத கர்ப்பிணி மனைவியும் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்த நீரஜ் என்ற இளைஞருக்கும், நீது என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் நீது மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் நீதுவின் தந்தை சந்தர் மகளை பார்ப்பதற்காக அவர் வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டின் உள்ளே, நீரஜும், நீதுவும் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலங்களை அவர்கள் கைப்பற்றினார்கள்.

சந்தர் கூறுகையில், என் மகள் காலையில் என்னுடன் போனில் பேசும் போது எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது, அது குறித்து பேசவேண்டும் என கூறினார்.

நானும் நேரில் பேசி கொள்ளலாம் என கூறிய நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், நீரஜ் கயிற்றால் நீதுவின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தூக்கில் தொங்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

தீவிர விசாரணைக்கு பின்னரே இந்த மரணம் குறித்த உண்மை தெரியவரும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்