உயிரை துச்சமாக நினைத்து பயணிக்கும் மாணவர்கள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
56Shares
56Shares
lankasrimarket.com

குஜராத் மாநிலத்தில் உடைந்து போன பாலத்தின் விளிம்பில் பள்ளி மாணவர்கள் பயணிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள நைகா-பேராய் கிராமங்களுக்கு இடையே ஓடும் கால்வாயில் தடுப்பணையுடன் கூடிய சிறிய பாலம் பாலத்தை கடந்துதான் மக்கள் மறுகரைக்கு செல்ல முடியும்.

இந்த பாலத்தை விட்டால் 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்ல வேண்டும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உடைந்துவிட்டது.

இருந்தாலும் வேறு வழியில்லாமல் பாலத்தில் உள்ள ஷட்டர் கதவினைப் பிடித்து தொங்கியபடி பொதுமக்கள் மறுகரைக்கு செல்கின்றனர்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் உயிரைப் பணயம் வைத்து இந்த பாலத்தைக் கடக்கின்றனர்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்