11 பேர் மரணத்தில் அலையும் ஆன்மாக்கள்: புதிர் கிளப்பும் குறிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா
235Shares
235Shares
lankasrimarket.com

டெல்லியை உலுக்கிய 11 பேர் தற்கொலை சம்பவத்தில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த விவகாரத்தில் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படுவது லலித் சுண்டவத்.

தொழிலதிபரான லலித், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக நினைத்து மாய உலகில் வாழ்ந்துள்ளார்.

லலித் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் நடந்தவற்றையும், தன்னுடைய குடும்பத்திற்கு கொடுத்த வழிகாட்டுதல்களையும் மறைந்த தனது தந்தை தனக்கு சொன்னதாகவும் சிலவற்றை டைரியில் எழுதி வைத்துள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் தேதி எழுதப்பட்டவற்றில், தீபாவளி கொண்டாடப்பட்டுவிட்டது, யாரோ செய்த தவறால் சிலவற்றை அடைய முடியவில்லை.

நீங்கள் அடுத்த தீபாவளியை பார்க்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது, எச்சரிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள் என்று கூ றப்பட்டுள்ளது.

மேலும், 2015- ஆண்டு ஜூலை 19-ம் தேதி எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில் லலித்தின் அப்பா கூறியதை போல எழுதப்பட்டுள்ளது.

அதில் என்னுடன் மேலும் நான்கு ஆத்மாக்கள் அலைந்துகொண்டிருக்கின்றன, நீங்கள் உங்களை முன்னேற்றினால் இந்த ஆன்மாக்கள் விடுபடும்.

ஹரித்துவாரில் அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டால் ஆன்மா சாந்தியடைந்துவிடும் என்று நினைக்கிறீர்கள், நான் மற்ற ஆன்மாக் களோடு அலைந்துகொண்டிருக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த மர்ம மரணத்தின் புதிரை அவிழ்க்க பொலிசார், அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்