பேரறிவாளனை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை: ராகுல் காந்தி கூறியதாக தகவல்

Report Print Vijay Amburore in இந்தியா
193Shares
193Shares
lankasrimarket.com

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதில், `நான் டெல்லியில் நேற்று மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் இரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்தேன்.

நாங்கள் அரசியல், படங்கள் மற்றும் சமூகப் பிரச்னை குறித்துப் பேசினோம், இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இது தொடரும் என நினைக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சந்திப்பு குறித்து பேசியுள்ள இயக்குனர் ரஞ்சித், திருமாவளவன் - ராகுல் சந்திப்பிற்கும், ரஞ்சித் - ராகுல் சந்திப்பிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

முன்னரே ரஞ்சித்தை சந்திக்க வேண்டும் என கேட்டிருந்த ராகுல், தற்பொழுது காலா படத்தை பார்த்ததும் ரஞ்சித்தை சந்தித்ததாக கூறியுள்ளார்.

மேலும், சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பேசியதாகவும், விடுதலை செய்வதில் தங்கள் குடும்பத்திற்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என ராகுல் காந்தி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்