தாலி கட்டும் சமயத்தில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! நின்றுபோன திருமணம்

Report Print Raju Raju in இந்தியா
232Shares
232Shares
lankasrimarket.com

இந்தியாவில் மணமேடையில் புது மாப்பிள்ளைக்கு வந்த மணப்பெண்ணின் ஆபாச புகைப்படத்தால் திருமணம் தடைபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அபலாபுரம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் தாலி கட்ட தயாராக இருந்தார்.

அப்போது கவர் ஒன்றை மணமகன் கையில் அங்கு யாரோ வந்து கொடுத்துள்ளனர்.

கவரை திறந்து பார்த்த மணமகன் அதிர்ச்சி அடைந்தார். அதில் மணமகள் ஆபாசமாக இருந்த புகைப்படம் இருந்தது. இதனால் மணமேடையை விட்டு எழுந்த மணமகன் அந்த பெண்ணை மணமுடிக்க முடியாது என்று கூறி சென்றுவிட்டார்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் நடைபெற்ற விசாரணையில், அந்த புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்று தெரிய வந்தது.

புகைப்படத்தில் வேறொரு பெண்ணின் தலையை மட்டும் வெட்டிவிட்டு மணப்பெண்ணின் முகத்தை மாற்றி அமைத்தது உறுதியானது.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்