8 வயது கனவை 88 வயதில் நிறைவேற்றிய ஏழை விவசாயி: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Santhan in இந்தியா
577Shares
577Shares
ibctamil.com

தமிழகத்தில் ஏழை விவசாயி ஒருவர் தன்னுடைய 8 வயது கனவை 88 வயதில் நிறைவேற்றி இணையத்தில் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். ஏழை குடும்பத்தில் பிறந்தவரான இவர் சிறுவயதில் சைக்கிளில் பயணம் செய்து வந்துள்ளார்.

அப்படி ஒரு முறை சைக்கிளில் பயணம் செய்த போது, திடீரென்று அவரை கார் ஒன்று முந்தி சென்றுள்ளது.

அந்த காரின் பெயர் தெரியாமல் இருந்த தேவராஜனுக்கு காரின் லோகோ அவரின் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது.

இதனால் அவர் தன்னுடைய 8 வயதில் அந்த காரை வாங்க வேண்டும் என்ற வாழ்நாள் கனவாக இருந்துள்ளது.

அப்படி தேவராஜனின் மனதைக் கவர்ந்த கார் 3 ஸ்டார்களை லோகோவாகக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் என்பதை அவர் அறிந்துள்ளார்.

அதன் பின் தொடர்ந்து உழைத்து வந்த அவர் தன்னுடைய வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்றிருந்த போது, தன்னுடைய 8 வயது காரை வாங்குவதற்கு தொடர்ந்து உழைத்து வந்துள்ளார்.

அவரின் கனவு நிறைவேற அவரது குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் தேவராஜ் தற்போது 88 வயதில் அடியெடுத்து வைக்கும் தேவராஜ் தன்னுடைய 8 வயது கனவை 88 வயதில் நிறைவேற்றியுள்ளார்.

ஆம் 8 வயதில் பார்த்து வாங்க நினைத்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி அசத்தியுள்ளார். தற்போது வெள்ளை நிற பி-கிளாஸ் மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

8 வயதில் நினைத்த கனவை தற்போது 88 வயதில் நிறைவேற்றியுள்ள தேவராஜின் செயலைக் கண்டு இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்