சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட அம்பு: அசம்பாவிதத்துக்கு அறிகுறி?

Report Print Raju Raju in இந்தியா
92Shares
92Shares
ibctamil.com

தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்பு வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோவிலின் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் கனவில் சிவன்மலை கடவுள் வந்து ஒரு பொருளை பெட்டிக்குள் வைக்க உத்தரவிடுவாராம்.

தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும்.

இதற்கு முன்னர் தண்ணீரை இங்கு வைத்த போது தான் சுனாமி வந்ததாம்.

கடந்த ஜனவரி மாதம் இங்கு கணக்கு நோட்டு வைக்க உத்தரவாகி உள்ளது.

தனால் ஜிஎஸ்டி வரிமுறை கடுமையானது

இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த கென்னடி என்பவரின் கனவில் செம்பு அம்பு தற்போது வந்துள்ளது.

இதையடுத்து உத்தரவு பெட்டியில் நேற்றிலிருந்து அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது யாருக்கேனும் ஆபத்தை ஏற்படுத்தும் அறிகுறியாக இருக்குமா என்று சிவன்மலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேசிக்கொள்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்