திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் வெறிச்செயல்

Report Print Raju Raju in இந்தியா
884Shares
884Shares
ibctamil.com

இந்தியாவில் திருமணமான பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பக்ரோல் கிராமத்தை சேர்ந்த திருமணமான 23 வயது பெண் இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள வயல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் அப்பெண்ணை வழிமறித்து இறுக்க பிடித்து கொண்டான்.

இதையடுத்து சிறுவனின் நண்பர்களான தீபக் பர்மர், பய்லு, உமேஷ் ஆகியோர் அங்கு வந்த நிலையில் நால்வரும் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனை பய்லும், உமேஷும் செல்போனில் புகைப்படம் எடுத்ததோடு, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதன்பின்னர் பாதிக்கப்பட்ட நேராக காவல் நிலையம் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து நால்வரையும் கைது செய்த பொலிசார் மூன்று இளைஞர்களை சிறையில் அடைத்த நிலையில், சிறுவனை மட்டும் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்