ராணுவ தளபதி மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரம்: வெளியான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய ராணுவ தளபதி மனைவி கொலை வழக்கில் இன்னொரு ராணுவ தளபதி கைதான விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருக்கும் அமித் திவேதியின் மனைவி சைலஜா என்பவர்தான் டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதியில் கழுத்தறுத்து கொல்லப்பட்டவர்.

இந்த விவகாரத்தில் இன்னொரு ராணுவ மேஜரான நிகில் ஹாண்டா என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொலை விவகாரத்தை விபத்து என முடிக்க சைலஜாவின் முகத்தின் மீது வாகனத்தை செலுத்தியுள்ளதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடப்பதற்கு முன்னர் கணவர் திவேதியின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் சைலஜா மருத்துவமனை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் மருத்துவமனையில் குறிப்பிட்ட மருத்துவரை சந்திக்கவில்லை எனவும், வேறு வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் பொலிஸ் விசாரனையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்த கொலை வழக்கு தொடர்பில் நாகாலந்தின் தீமாபூரில் பணிபுரியும் நிகில் ஹாண்டாவை பொலிசார் மீரட் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

நாகாலாந்தில் வைத்தே நிகிலுக்கு சைலஜாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனிடையே டெல்லிக்கு பணி மாறுதல் பெற்று திவேதி சென்றதும் சைலஜா டெல்லியில் குடியேறியுள்ளார்.

சம்பவத்தன்று சைலஜாவை சந்திக்கவே நிகில் டெல்லி சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி சைலஜாவுடனான காதல் தான் அவரை கொலை செய்யும் அளவுக்கு நிகிலை தூண்டியதா என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...