வரம்பு மீறினால் உங்களுக்கும் இதே நிலைமைதான் - பத்திரிகையாளர் கொலை சம்பவம் பற்றி பாஜக மிரட்டல்

Report Print Trinity in இந்தியா

வரம்பு மீறி செய்தி வெளியிட்டால் நீங்களும் கொல்லப்படலாம் என ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை உண்டாகியிருக்கிறது.

பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து சர்ச்சைகளுக்கு குறையவேயில்லை. அதற்கேற்றாற்போல சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாக பாஜக அமைச்சர்கள் முரட்டுத்தனமாக பேசி வருவதும் குறையவேயில்லை.

இந்த வகையில் ஜம்மு காஷ்மீர் பாஜக மாநில தலைவரான லால் சிங் தற்போது கொடுத்த பேட்டியில் பத்திரிகையாளர்களை மிரட்டுகின்ற வண்ணமாக அவரின் பேச்சு அமைந்திருப்பது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

சமீபத்தில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புஹாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த மரணம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து லால் சிங் பேசும்போது , காஷ்மீர் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிடும்போது வரம்புகளுக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லாமல் வரம்புக்கு மீறி செய்திகள் வெளியிட்டால் சுஜாத் புஹாரிக்கு ஏற்பட்ட நிலைமைதான் மற்றவர்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார்.

இவரது இந்த பேச்சு பத்திரிகையாளர் வட்டத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers