ஒருவேளை சாப்பாடு.. தனது சாவிற்கு தன்னிடமே பணம் கேட்ட மகன்.. கண்கலங்க வைக்கும் முதியவர் காணொளி!

Report Print Vijay Amburore in இந்தியா

கோயம்புத்தூர் அருகே கவுண்டம்பாளையத்தில் மனைவியின் பேச்சை கேட்டு பெற்ற மகன் வீட்டை விட்டு வெளியில் விரட்டிவிட்டான் என கைநடுங்க பேசும் முதியவரின் காணொளி காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

கோயம்பத்தூர் கவுண்டம்பாளையம் அருகே அம்மன் தெருவை சேர்ந்த முதியவர் பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கை நடுங்கும் அளவிற்கு வயதான காலத்தில் வீட்டிற்கு சம்பாதித்து கொடுக்காததால், மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டு பெற்ற மகன் கழுத்தை பிடித்து வெளியில் விரட்டிவிட்டதாக அந்த முதியவர் கூறியுள்ளார்.

தினமும் ஒருவேளை மட்டுமே உணவு கொடுப்பதாகவும், மேற்கொண்டு கேட்டால், "வெளியில் சென்று பிச்சை எடுத்து சாப்பிடு" என மருமகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண் தெரியாத காலத்தில் நான் எங்கடா போவேன் என கூறினாலும் மனம் இறங்காத மகன், செத்துப்போ எனக்கூறி விரட்டி விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers