அமைச்சரின் தலைமையில் தவளைகளுக்கு டும் டும் டும்... களைகட்டிய திருமணவிழா

Report Print Vijay Amburore in இந்தியா

மத்தியபிரதேசத்தில், அமைச்சர் லலிதா யாதவ் தலைமையில், இரு தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தில் உள்ள சாட்டார்புர் கோவிலில், மழைவரம் வேண்டிபொதுமக்களால் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதில் பெண்கள் மற்றும்குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லலிதா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பின்னர் இதுகுறித்து கோவில் அர்ச்சகர் ஆச்சார்ய பிரிஜ்நந்தன் கூறுகையில், தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது ஒரு பழமையான பாரம்பரியம் என்றும், அவ்வாறு நடத்தி வைத்தால் மழை பெய்யும் என்பது ஒரு நம்பிக்கை எனவும் தெரிவித்தார்.

இதேபோன்று உத்திரபிரேதேசம் வாரணாசி அருகே பிளாஸ்டிக் தவளைகளுக்கு மாலை அணிவித்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மாப்பிள்ளைக்கு மணமகன் போலவும், பெண்ணுக்கு மணப்பெண் கொள்ளவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...