அண்ணனுக்கு சிறுநீரகம் கொடுக்க உயிர் தியாகம் செய்த தம்பி: பின்னர் நடந்த சோகம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் தனது சகோதரனுக்கு சிறுநீரகம் கொடுக்க, தம்பி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோரா அருகே உள்ள வல்சாத் பகுதியைச் சேர்ந்தவர் நைட்டிக்குமார் தாண்டல்(19), இவர் பொறியியலில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது அண்ணன் கெனிஷிற்கு(24) இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு டயாலிஸ் செய்ய முடியாது என்ற சூழல் உருவானது.

இதனால் உடனடியாக மாற்று சிறுநீரகம் பொறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர், அதனைத் தொடர்ந்து பல இடங்களில் தொடர்பு கொண்டபோதும் கெனிஷிற்கு சிறுநீரகங்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கெனிஷின் தம்பி நைட்டிக்குமார், தனது சகோதரருக்கு சிறுநீரகம் அளிக்க வேண்டும் என்று நினைத்து விபரீத முடிவை எடுத்தார்.

தான் தங்கியிருந்த விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், நீண்ட நேரமாக அறையின் கதவு திறக்கப்படாததால், சக மாணவர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் நைட்டிக்குமாரின் உடலைக் கைப்பற்றினர், பின்னர் அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

அதில் தனது அண்ணனுக்கு தன்னுடைய சிறுநீரகங்களை வழங்க வேண்டும் என்றும், பிற உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், நைட்டிக்குமார் இறந்து 36 மணிநேரத்திற்கு மேலானதால் அவரது உடல் அழுக ஆரம்பித்தது. இதனால் அவரது உறுப்புகள் பயன்பாடது என்றும், யாருக்கும் பொறுத்த முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தனது சகோதரருக்காக அவர் செய்த உயிர் தியாகம் வீணானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்