எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவரின் சடலம்: பொலிஸார் தீவிர விசாரணை!

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன ஐஐடி மாணவர், எரிந்த நிலையில்சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் அடுத்தகூடுவாஞ்சேரியை சேர்ந்த சிவகுமார் என்ற மாணவர், கிண்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஐஐடி படித்து வருகிறார்.

கடந்த 1 மாதத்திற்கு முன்னர் காணாமல் போன இவர், நண்பர்கள் யாருடைய வீட்டிற்காவதுசென்றிருப்பார் என நினைத்து, பெற்றோர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபடாமல் இருந்ததோடு, காவல்நிலையத்தில் புகார் கொடுக்காமலும் இருந்துள்ளார்.

இந்நிலையில்சென்னை கிண்டி பகுதியில் சாலை ஓரத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில்கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில்காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவரின் சடலம் சிவகுமார் என அடையாளம் கண்டறியப்பட்டது.

ஆனால் கொலைக்கான காரணம் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை.

மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...