டீ விற்பவரின் மகள் விமானப்படையில் தேர்வாகி அசத்தல்: பெற்றோர் நெகிழ்ச்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் டீ விற்பவரின் மகள் விமானப்படைக்கு தேர்வாகி அசத்தியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தின் Neemuch மாவட்டத்தின் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த Aanchal Gangwal என்ற 24 வயது பெண் தான் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Aanchal Gangwal 12-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது உத்திரகாண்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அங்கிருக்கும் மக்களை மீட்பதற்கு மீட்புபடையினர் அங்கு இறங்கி பலரின் உயிரைக் காப்பாற்றினர்.

இதைக் கண்ட Aanchal Gangwal-க்கு இதே போன்று நாமும் நிச்சயம் ஆக வேண்டும் என்ற கனவு தோன்றியுள்ளது.

ஆனால் அவரின் குடும்ப சூழ்நிலை அதற்கு ஏற்ற வகையில் இல்லாததால் கடும் சிரமத்தை சந்தித்து வந்துள்ளார்.

இருப்பினும் தன்னுடைய முயற்சியை விடாத இவர் Air Force Common Admission தேர்வை தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

Air Force Common Admission தேர்வு என்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல, சுமார் 5 முறை போராடி தோல்விடைந்த இவர், தற்போது 6-வது முறை மீண்டும் முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஜுன் 6-ஆம் திகதி இதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. 6 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 22 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அந்த 22 பேரில் இவரும் ஒருவர்.

இவரின் குடும்பம் டீ விற்று தான் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இருப்பினும் தன்னுடைய விடா முயற்சியின் மூலம் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றதால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...