தேசத்துரோக கருத்து! இயக்குனர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்த காரணத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் நாராயணன். இவர் இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் ஆவார். இவர் சென்னை பொலிஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை என்றும், அப்படியொரு சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வடபழனி பொலிஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்துள்ளதால் பாரதிராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், இயக்குநர் பாரதிராஜா மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், மக்களையும் அரசையும் அச்சுறுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி பொலிசார் வழக்குப் பதிவுசெய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...