மருத்துவரால் மரணித்ததாக சொல்லபட்டவர் உயிரோடு வந்த அதிசயம்

Report Print Trinity in இந்தியா

ஹரியானாவில் 60 வயது நபர் ஒருவர் மரணித்து விட்டதாக மருத்துவர் சொன்ன பின்பு மீண்டும் உயிரோடு எழுந்த அதிசயம் நடந்துள்ளது.

ஹரியானா பானிபட் பகுதியை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் உடல்நலமில்லாமல் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லியில் பிரபல மருத்துவமனை மருத்துவர் இவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்தார். ஆனால் அது பலனளிக்காமல் அந்த நபர் இறந்து விட்டார் என கூறியிருக்கிறார்.

ஆகவே அந்த நபரின் உடலை வாகனத்தில் ஏற்றி இறுதி சடங்கிற்காக கொண்டு சென்றனர்.

அப்போது உடலை கொண்டு போகும் வழியில் இறந்த நபரின் உடலில் இருந்து வியர்வை சுரந்திருக்கிறது. இதனால் உடனடியாக அவரை மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் உயிருடன் இருப்பதாக கூறி சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர்.

மருத்துவரின் அலட்சியத்தாலேயே உயிரோடு இருந்த ஒருவரை இறந்தவராக சொல்ல முடிந்திருக்கிறது என்று அந்த பிரபல மருத்துவமனை மீது புகார் கூறினர்

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...