மனைவியை ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு! குழந்தைகளை துப்பாக்கியால் சுட்ட கணவன்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மனைவியை கொலை செய்துவிட்டு சுமார் 18 மணி நேரம் போக்கு காட்டிக் கொண்டிருந்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கனபுராவில் காலேஷ்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரின் தொழில் சமீபகாலமாகவே மந்தமாக சென்றுள்ளது.

பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததால், கணேஷ் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்துள்ளார்.

அதிலும் நஷ்டம் ஏற்படவே, கடன் கொடுத்தவர்கள் எல்லாம் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் அவர் தனது சொத்துக்களை எல்லாம் விற்று கடன்களை அடைத்துள்ளார்.

இது தொடர்பாக அவ்வப்போது கணேசிற்கும் அவரது மனைவியான சஹானாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது சஹானா குழந்தைகளுக்கு என்று சொத்துக்கள் ஏதும் வைக்காமல் இப்படி விற்றால் அவர்களின் எதிர்காலம் என்னா ஆகும் என்று கேட்டுள்ளார்.

இப்படி நாள்தோறும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழனன்று பெங்களூரில் வீட்டில் இருந்தபோது இருவருக்கும் கடும் சண்டை நடந்துள்ளது.

ஆத்திரமடைந்த கணேஷ் லைசென்ஸ் பெற்று, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சஹானாவை சுட்டு கொலை செய்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சஹானா சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

அதன் பின் செய்வதறியாமல் முழித்த கணேஷ் வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்த தன்னுடைய குழந்தைகளை காரில் அழைத்துக் கொண்டு, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பனகிரி ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் சஹானாவின் தொலைபேசிக்கு அவரின் தந்தை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் வெகுநேரமாகியும் எடுக்காததால், சந்தேகமடைந்த அவர், வீட்டில் வந்து பார்த்த போது மகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, பொலிசார் கணேசை தேடத் துவங்கியுள்ளனர். சுமார் 16 மணி நேரம் போக்கு காட்டிய கணேசை பொலிசார் பனகிரி தேசிய நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தனர்.

அப்போது பொலிசாரிடம் சரணடைய விரும்பாததால், குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்.

ஆனால் தைரியமின்றி தயங்கிக் கொண்டிருந்ததால், பொலிசார் அந்த நேரத்தில் அவரை பிடித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த குழந்தைகளை பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும், கைது செய்யப்பட்ட கணேஷிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...