செத்த மிருகத்தை போன்று அடித்து இழுத்துவந்தார்கள்: இஸ்லாமிய இளைஞரின் சகோதரர் கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

செத்த மிருகம் போன்று என் சகோதரனை தரதரவென இழுத்து வந்தனர் என்று செய்தியாளர் சந்திப்பில் இளைஞர் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹபூர் மாவட்டம், பில்குவா பகுதியில் உள்ள பஜேகுரா குர்து கிராமத்துக்கு காசிம், அவரின் நண்பர் சமயுதீன் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை கால்நடைகள் வாங்கச் சென்றனர்.

அப்போது இவர்களை பார்த்த அக்கிராம மக்கள் சிலர் பசு மாட்டை வாங்கிக் கொண்டு போய் கொல்லப்போகிறார்கள் என்று நினைத்து, அடித்து உதைத்து தரதரவென இழுத்துச் சென்றனர்.

இதைக் கண்ட பொலிசார் கண்டும் காணாதது போல் இருந்தனர். இதனால் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதால், உத்திரப்பிரதேச பொலிசார் மன்னிப்பு கோரினர்.

இதையடுத்து காசிமின் சகோதரர் முகம்மது நதீம் நேற்று செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார்.

அதில், அப்பகுதி மக்கள் நினைப்பது போன்று என் சகோதரரும், அவரது நண்பரும் இறைச்சிக் கடைக்காரர்கள் இல்லை.

அவர்கள் கால்நடைகளை விலைக்கு வாங்கி, அதை சந்தியில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர்கள். ஆனால் பா.ஜக குண்டர்கள் அவர்க்ளை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

அதோடு மட்டுமின்றி ஒரு இறந்த மிருகத்தை சாலையில் இழுத்து வருவது போல், என் சகோதரை இழுத்து வந்துள்ளனர்.

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது என் சகோதரன் தண்ணீர் கேட்டு அழுத போது யாரும் அவருக்கு உதவ வரவில்லை, இது பொலிசார் கண்முன்னே நடந்துள்ளது.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு புறப்படும் போது கூட, நான் கால்நடைகள் வாங்கப்போகிறேன் என்று சென்றவன், வீடு திரும்பவே இல்லை.

பிணமாகத் தான் அவனை வீட்டிற்கு அழைத்து வந்தோம் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அந்த கும்பலால் தாக்கப்பட்ட மற்றொருவர்ரான சமயுதீன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவனை பார்ப்பதற்கு பொலிசார் என்னை சுமார் 6 மணி நேரம் குழப்பிவிட்டதாகவும், சமயுதீனின் சகோதரர் முகம்மதுமெகருதீன் கூறியுள்ளார்.

எங்களுக்கு தெரியாமலே சமயுதீனிடம் பொலிசார் கைரேகை பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அது ஏன் தெரியவில்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...