குடிக்காதீங்கப்பா ப்ளீஸ்.. கெஞ்சிய மகளை துடிக்க துடிக்க கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை!

Report Print Vijay Amburore in இந்தியா

ஜார்கண்ட் அருகே மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கூறியதற்காக, துடிக்க துடிக்க மகளின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஞ்சி அருகே மொராபாடி என்ற கிராமத்தை சேர்ந்தவ பிரதீப் முண்டா, ரிட்சா ஓட்டும் வேலை செய்துவருகிறார். இவர் தினமும் வேலை முடிந்த பின்னர், மது அருந்திவிட்டு வீட்டில் மனைவி ஊர்மிளா தேவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் வீட்டில் நிம்மதி இழந்த அவரது மகள் சுஜாதா குமாரி(18), குடியை விடுமாறு அவரது தந்தையிடம் கெஞ்சியுள்ளார்.

ஆனால் மகளின் கெஞ்சலை பொருட்படுத்தாத தந்தை, மீண்டும் குடித்து விட்டு வீட்டில் வந்து சண்டையிட்டுள்ளார். இதனால் அவருக்கும், சுஜாதாவிற்கும் இடையே எழுந்த வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த பிரதீப் கோடாரியை கொண்டு, சுஜாதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்

இதனையடுத்து சுஜாதாவின் தாய், ஊர்மிளா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...