தாயை டிராக்டர் முன் தூக்கி வீசிய கொடூர மகன்: இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் எதிரியை தடுத்து நிறுத்துவதற்காக தாயை மனித கேடயமாக்கிய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம், முன்ஷிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவ்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கைலாஸ் தால்வி என்பவருக்குமிடையே அடிக்கி நிலப்பிரச்சனை தொடர்பாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக இந்த விவகாரம் உடனடியாக தாசில்தார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பிரச்சனைக்கு காரணமான நிலம், ராவத்துக்கு சொந்தமானது என கூறப்பட்டது.

இதையடுத்து நிலம் தமக்கு சொந்தம் என கூறப்பட்டுவிட்டதால், ராவத் கடந்த 21-ஆம் திகதி நிலத்தில் பயிரிடுவதற்காக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, தால்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இங்கு பயிரிடக் கூடாது என்று அவர் ஓட்டி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் ரவத்தோ தொடர்ந்து டிராக்டரை முன் நகர்த்தியதால், உடனடியாக தால்வி தன்னுடைய தாயாரை டிராக்டரின் முன் தள்ளிவிட்டுள்ளார்.


இதனால் அதிர்ச்சியடைந்த ராவத் உடனடியாக டிராக்டரை பின்னோக்கி நகர்த்த, ராவத் தள்ளாடிய நிலையில் இருக்கும் தாயாரை மீண்டும் டிராக்டரின் முன்னால் தூக்கி போடுகின்றார்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...