ரத்த வெள்ளத்தில் புதுமண தம்பதி! நள்ளிரவில் நேர்ந்த சோகம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் நள்ளிரவில் வீட்டின் மாடியில் பேசிக்கொண்டிருந்த புதுமணி தம்பதி கீழே விழுந்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை தரமணி கானகத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தை குடியிருப்பவர் சங்கலிங்கம்.

ஓட்டுநர் வேலை செய்து வரும் இவருக்கும், சுப்புலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

சந்தோஷமாக இருவரும் வாழ்ந்த நிலையில், நேற்றிரவு வீட்டின் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சங்கலிங்கம் நிலைதடுமாறி கீழே விழ, இவரை காப்பாற்ற முயன்ற சுப்புலட்சுமியும் கீழே விழுந்தார்.

இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...