கொலை செய்து புதைத்த 15 வயது சிறுவனின் உடல் தோண்டப்பட்டு பரிசோதனை

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை சூளைமேட்டில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 15 வயது சிறுவனின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி 14-ம் திகதி விளையாடச் சென்ற, சூளைமேட்டைச் சேர்ந்த சிறுவன் ராஜேஷ், வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 17-ம் திகதி இரவு சூளைமேட்டைச் சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் கிழக்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த பரத்குமார் ஆகிய 3 சிறுவர்கள், ராஜேஷை கொலை செய்து புதைத்ததாகக் கூறி, சூளைமேடு காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

சூளைமேடு சுடுகாடு அருகே உள்ள மைதானத்தில், கஞ்சா அடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுவன் ராஜேஷ் அவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷை அடித்ததில் அவர் உயிரிழந்ததாகவும், இதையடுத்து 4 பேரும் சேர்ந்து ராஜேஷை சூளைமேடு சுடுகாட்டில் புதைத்ததாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும், சூளைமேடு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதில் விக்னேஷைத் தவிர, மற்ற 3 பேரும் சூளைமேடு சுடுகாட்டில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிறுவன் ராஜேஷ் புதைக்கப்பட்ட இடத்தில், அவரது உடல் எழும்பூர் வட்டாட்சியர் சேகர் முன்னிலையில், தோண்டி எடுக்கப்பட்டது.

ராஜேஷின் பெற்றோர், அவரது உடலை அடையாளம் காண்பித்து கதறி அழுதனர். மேலும் கைது செய்யப்பட 2 சிறுவர்கள் உட்பட 4 பேரையும், பொலிசார் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து, உடலை அடையாளம் காட்டச் செய்தனர்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் உதவி பேராசிரியர் கார்த்திகா மற்றும் தடயவியல் உதவி இயக்குனர் சோபியா ஆகியோர், தோண்டி எடுக்கப்பட்ட உடலை ஆய்வு செய்து, பரிசோதனைக்காக உடலின் எலும்புகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...