சிக்கிம் விளம்பர தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நியமனம்!

Report Print Vijay Amburore in இந்தியா

சிக்கிம் மாநிலத்தின் அதிகாரபூர்வ விளம்பர தூதராக ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் பெரிய அளவிற்கு தொழில் வளர்ச்சி இல்லாத நிலையிலும், இயற்கை வளம்கொழிக்கும் விவசாயத்தினை கொண்டு நாட்டிலேயே வேளாண் விவசாயம் செய்யும் முதல் மாநிலமாக திகழ்கிறது. உலகம் முழுவதுமுள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக சிக்கிம் மாநில முதல்வர் சாம்லிங் தீவிரமான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தின் இயற்கை அழகை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை மாநிலத்தில் அதிகாரபூர்வ விளம்பர தூதராக நியமித்துள்ளார்.

இதுகுறித்து மாநிலத்தின் தலைமை செயலாளர் ஏ.கே.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏ.ஆர்.ரகுமான் சிக்கிம் மாநில விளம்பர தூதராக செயல்படுவார் எனவும், அவர் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிக்கிம் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து எடுத்துரைப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சிக்கிமில் நடந்த குளிர்கால திருவிழாவில், ஏ.ஆர்.ரகுமான் சிக்கிம் அரசின் சுற்றுலா மற்றும் விளம்பர தூதரக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...