சொகுசு வாழ்க்கை...காதலிகள்! சினிமா பாணியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய திருடர்களின் கதை

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக கார்களை திருடிய இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாங்காடு சிக்கராயபுரம் லீலாவதி நகரைச் சேர்ந்தவர் செல்வம், இவரது காரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி காரைப் பறித்துச் சென்றது.

இதுகுறித்து செல்வம் பொலிசில் புகார் அளித்ததையடுத்து அவர்கள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது,

இவர்கள் குற்றவாளிகளை தேடிக்கொண்டிருக்கையில், திரைப்பட தயாரிப்பாளர் ராமசந்திரனின் கார் டிரைவர் சந்திரனிடமிருந்து சொகுசு காரை ஒரு கும்பல் பறித்தது.

கார் திருடும் கும்பலைப் பிடிக்க சென்னை பொலிஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். செல்வத்தின் காரைத் திருடிய குன்றத்தூரைச் சேர்ந்த அப்துல் அமீதை பொலிசார் கைது செய்து, அவரிடமிருந்து காரையும் மீட்டனர்,

அப்துல் அமீதின் தனது கூட்டாளிளோடு சேர்ந்து சொகுசு காரைத் திருடியது தெரியவந்தது, விஜய், தனுஷ், சாம்சன், அருள்தாஸ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரும் இதன் பின்னணியில் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கார் திருட்டில் ஈடுபட்டவர்கள், 17 வயது முதல் 21 வயது உடையவர்கள்.

இவர்கள்மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. காரைத் திருடிய இவர்கள் அடுத்தடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கும்பலில் உள்ளவர்களுக்குக் காதலிகள் இருக்கின்றனர். ஆடம்பரமாகவும் ஜாலியாகவும் வாழத்தான் காரைத் திருடி அதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கார்களை வைத்து தாங்கள் வசதியானவர்கள்போல காட்டி பெண்களுக்கு வலைவீசியுள்ளனர். இதில் இவர்களிடம் சிக்கிய பெண்களை காதலியாக்கியுள்ளனர்.

தற்போது, இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers