கை விரல்கள் வெட்டப்பட்டு வந்த கணவன்: அதிர்ச்சியில் மனைவி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காணாமல் போன கணவன் தொழு நோய் அறிகுறியுடன் விரல்கள் அகற்றப்பட்டு வந்ததால், அதைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

தேனி அல்லிநகரம் அழகர்சாமி காலனியை சேர்ந்தவர் கருப்பையா(32). இவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த 15-ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு முன் கருப்பையா மனநிலை சரியில்லாமால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநோய் காப்பகத்தில் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று கொண்டு வந்த நிலையில், திடீரென கருப்பையா காணமல் போயுள்ளார். இதனால் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குடும்பத்தினர் அவரை தேடுவதை விட்டுள்ளனர்.

அவர் போன பின்பு முத்துலட்சுமிதான் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணமல் போன கருப்பையா தீராத மனநோயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் தொழுநோய் அறிகுறிகளுடன் கால்விரல்கள் முடங்கியும், சில விரல்கள் அகற்றப்பட்டும், கைவிரல்கள் அகற்றப்பட்டும் இருந்ததால் இதைக் கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து நேற்று கணவருடன் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர், கலெக்டரை சந்தித்து புறம்போக்கு நிலத்தில் தான் வாழ்ந்து வருகிறேன்.

கூலி வேலைக்கு சென்றே என் குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். எனது கணவரை பாதுகாக்கவும், குடியிருக்கவும் வீடு வழங்க வேண்டும், எனது கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி மனு அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்