ஒன்றொடொன்று சண்டையிட்டு மாணவிகள் மீது விஷத்தை கக்கிய பாம்புகள்: அச்சத்தில் கத்திய மாணவிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குப்பத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்

இந்நிலையில், 5-ம் வகுப்பு மாணவ மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அப்போது, மரத்தின் மேலிருந்து திரவம் ஒன்று வடிந்து மாணவிகள் மீது விழுந்துள்ளது.

அதனைத் துடைத்த மாணவிகள் மரத்தின் மேல் அண்ணாந்து பார்த்தபோதுதான், மரத்தில் மூன்று பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த மாணவர்கள் பயத்தில் கத்தினர்.

அப்போது, மூன்று பாம்புகளும் பின்னிப் பிணைந்து ஒன்றொடொன்று சண்டையிட்டு விளையாடியபடி விஷங்களைத் துப்பியது தெரியவந்தது.

மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், மணிமேகலை, பாண்டிமீனா, மகேஸ்வரி, சிவஜோதி, கனிஸ்கா உள்ளிட்ட 5 மாணவிகளுக்கு அரிப்பு, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, மாணவர்கள் மீது விழுந்த திரவம், விஷமாக இருக்கலாம் என்கிற அச்சத்தில் மாணவர்களை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் மாணவிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிகளின் உடல்நிலை குறித்து பயப்படும்படியாக ஏதும் இல்லை. அவர்கள் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...