நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்வி சேகர்

Report Print Fathima Fathima in இந்தியா

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்வி சேகர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

பிரபல நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்திருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டன குரல்கள் எழவே, தன்னுடைய பதிவு இல்லை என விளக்கம் அளித்ததுடன் மன்னிப்பும் கேட்டார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் எஸ்வி சேகர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இவரை கைது செய்த பொலிசார் திட்டமிட்ட போது தலைமறைவானார், எனினும் சில நாட்களுக்கு முன் பொலிசார் பாதுகாப்புடன் எஸ்வி சேகர் வலம்வரும் புகைப்படங்கள் வெளியாகின.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றும் எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை, அத்துடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் எஸ்வி சேகர் மீது மத்திய குற்றவியல் பொலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர், மேலும் 20ம் திகதி நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதன்படி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார், இதனால் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers