நள்ளிரவில் ஆடையை களைந்து சூடு வைத்த நாத்தனார்கள்: பெண்ணுக்கு நேர்ந்த நிலை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சடங்கு என்ற பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தர்மபுரியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2001-ஆம் ஆண்டு தன்னுடைய நாத்தனார்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், தனக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி என்னுடைய நாத்தனார்கள் நள்ளிரவில் தொப்பூர் அணைக்கு அழைத்துச் சென்று, தன்னுடைய ஆடைகளை களைந்து மொட்டை அடித்து, நாக்கில் சூடு வைத்து, அதன் பின் தாலியை கழற்ற சொல்லிவிட்டு மீண்டும் கணவனை கட்டச்சொன்னார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பொலிசார் விசாரணை நடத்திய பொலிசார் நாத்தனார்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஏற்கெனவே தண்டனையே அனுபவித்துவிட்டதாலும், இது போதுமானது என்று கூறினார்.

மேலும் நான்கு நாத்தனார்களுக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இதை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்க வேண்டும் என கூறினார்.

சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் தன்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...