கணவனை கொடூரமாக வெட்டி கொலை செய்த மனைவி: ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குடி போதையில் பணம் கேட்டு தகராறு செய்த கணவனை மனைவி வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்.

கூலித்தொழிலாளியான இவருக்கு ராஜாமணி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ஜனார்த்தனன் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வேலைக்கு செல்லாத காரணத்தினால் அவர் தன் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.

குடிக்க வேண்டாம் என்று மனைவி கண்டித்த போதும், ஜனார்த்தனன் அவரின் பேச்சை கேட்காமல் மனைவியிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு மது அருந்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவும் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்ததுடன் வீட்டிலிருந்து பணத்தையும் எடுத்துச் சென்று மது அருந்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜாமணி காலையில் அவர் வந்தவுடன் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவரின் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறில் போய் முடிந்ததால் கோபத்தில் இருந்த மனைவி ராஜாமணி, அருகில் இருந்த மண்வெட்டியால் கணவரை வெட்டியுள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ஜனர்த்தனின்உடலை மீட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் ராஜாமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்