திருமணம் முடிந்து குழந்தை இருக்கும் பெண்ணை அடைவதற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Santhan in இந்தியா
276Shares

இந்தியாவில் நான்கு வயது சிறுவனை கடத்திய நபர் பொலிசாரிடம் சொன்ன காரணம் அவர்களை அதிரவைத்துள்ளது.

டெல்லியின் மதுவிஹார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 16-ஆம் திகதி தன்னுடைய 4 வயது மகன் காணமல் போய்விட்டதாகவும், சிவக்குமார் என்பவர் தான் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிவக்குமாரை கவனித்து வந்த பொலிசார், சிறுவனை கடத்தியதை உறுதி செய்தனர்.

அதன் பின் அவரை கைது செய்து சிறுவனை மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் தாயை திருமணம் செய்துகொள்ள விரும்புனேன்.

ஆனால் என்னுடைய விருப்பத்தை அவர் பலமுறை நிராகரித்துவிட்டார். இதனால் அவர் குழந்தையை கடத்தி மிரட்டினால் கட்டாயம் திருமணம் செய்து கொள்வார் என்று கடத்தினேன்.

ஆனால் கடைசியில் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்