காவல் நிலையத்திற்கு அருகிலேயே வெட்டி கொல்லப்பட்ட நபர்: பட்டப்பகலில் நடந்த கொடூரம்

Report Print Trinity in இந்தியா

திண்டுக்கல் மாவட்டம் குடையாரைப்பட்டியை சேர்ந்த குமரேசனுக்கு வயது 28. இவருக்கு மனைவியும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர் அப்பகுதியில் உள்ள கறி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது நிறைய குற்ற வழக்குகள் இருந்து வந்திருக்கின்றன.

இந்நிலையில் மக்கள் அதிகம் நடமாடுகின்ற பகுதியான ஆர்.வி.நகர் காளியம்மன் கோயில் அருகில் வேலைக்கு சென்று கொண்டிருந்த குமரேசனை சிலர் வழிமறித்து கண்களில் மிளகாய் பொடி தூவியுள்ளனர்.

அதன்பின் குமரேசனை கைகளில் உள்ள அரிவாளால் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர். இதனால் குமரேசன் ரத்த வெள்ளத்தில் தடுமாறினார். அவரது பின்மண்டையை அரிவாளால் தாக்கி அவரை கொடூரமாக கொலை செய்த கும்பல் பின் தப்பியோடியது.

சம்பவம் நடந்த இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில்தான் தெற்கு காவல்நிலையம் இருந்திருக்கிறது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து குமரேசனின் சடலத்தை கைப்பற்றினர்.

ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் இருக்கும் குமரேசனுக்கு முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா ? கொடுக்கல் வாங்கல் தகறாரா? என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் ஏற்பட்ட இந்த பயங்கர கொலை சம்பவத்தால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers