ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க கூடாது! இந்திரா பானெர்ஜி

Report Print Trinity in இந்தியா
71Shares

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க கூடாது என்பதே தனது கருத்து என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி இந்திரா பானெர்ஜி கூறியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் எம்ஜி ஆர் சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முயற்சித்து வருகிறது இதற்காக ரூபாய் 50 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

36,806 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட போகும் இந்நினைவிடத்திற்கு டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டன.

இந்த நினைவிடம் கடலோர மண்டல ஒழுங்கு முறைகளின் கீழ் அமைக்கப்படவில்லை என்று பல பொதுநல மனுக்கள் சென்னை உய்ரநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் எம்ஜிஆர் சிலை இருக்கும் வளாகத்திற்குள்தான் இந்த நினைவிடம் அமைய இருப்பதாகவும் இதில் விதிமீறல் எதுவும் நடக்கவில்லை என்றும் வாதாடினர்.

இந்த வாதங்களை கேட்டபின் நீதிபதி இந்திரா பானெர்ஜி உலகில் நீளமான கடற்கரையில் ஒன்றான மெரீனாவை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திற்கு சொந்தமான பகுதிகளில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்து விடக் கூடாதென்பது என் தனிப்பட்ட கருத்து.

இருப்பினும் வழக்கறிஞர்களின் வாதத்தை பொறுத்து சட்டத்திற்கு உட்பட்டே இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூன் 25 ஆம் தேதி அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்